துபாய் : துபாய் ஈமான் அமைப்பு 25.02.2010 வியாழக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் தேராவில் உள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் என்றழைக்கப்படும் குவைத் பள்ளியில் நடைபெற்றது.
ஈமான் சங்க தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹூத்தீன் அவர்கள் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியின் துவக்கமாக ஹாபிழ் முஹம்மது இப்றாஹிம் இறைவசனங்களை ஓதினார். அதனைத் தொடர்ந்து இறைகீதங்களை ஹாபிழ் முஹம்மது இப்றாஹிம் மற்றும் முத்து வாப்பா ஆகியோர் பாடினர்.
பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் அவர்கள் தனது தலைமையுரையில் சிலர் மீலாது விழா கொண்டாடக்கூடாது என்கின்றனர். மீலாது விழாவின் மூலம் நபிகள் நாய்கம் ( ஸல் ) அவர்கள் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கிறது என்றார்.
சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி எம். முஹம்மது அபுதாஹிர் ஆலிம் பாக்கவி அவர்கள் விழாப்பேருரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் துபாய் குவைத் பள்ளியில் தமிழகமே திரண்டு வந்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். சகோதரத்துவம் குறித்தும், சமய நல்லிணக்கம் குறித்தும் உரை நிகழ்த்தினார். மேலும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். நான் என்ற அகந்தை அகழ வேண்டும் என்றார்.
பேச்சுப் போட்டி
மீலாத் விழாவினையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஈமான் சங்க தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் அவர்கள் வழங்கினார்.
குறுந்தகடு வெளியீடு
தேரிழந்தூர் தாஜுத்தீன் அவர்கள் பாடிய மௌலிது பாடல்களின் குறுந்தகட்டை ஈமான் சங்க தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை குவைத் பள்ளி இமாம் மௌலவி எம். ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கீ பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நாகூர் சேக் தாவூது, இந்தியா சில்க் ஹவுஸ் அபுதாஹிர், அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
சுன்னத் வல்ஜமாஅத் பேரவையின் முஹம்மது மஹ்ரூப், வத்தலக்குண்டு மௌலவி எம். ஷம்சுல்ஹுதா ரஷாதி,
கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியினை விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
குவைத் பள்ளி இமாம் மௌலவி எம். ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கீ அவர்கள் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பெண்களுக்கு பள்ளியின் மேல்தளத்தில் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.