Latest News
17-DECEMBER-2009
துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ முஹ‌ர்ர‌ம் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி
[+] Read More
02-DECEMBER-2009
துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் ஈமான் ச‌ங்க‌த்தின் 34 ஆம் ஆண்டு விழா
[+] Read More
25-AUGUST-2009
துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்ச்சியில் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் ப‌ங்கேற்பு
[+] Read More
05-AUGUST-2009
துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் புனித‌ ப‌ராஅத் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி
[+] Read More
11-JUNE-2009
துபாய் ஈமான் அமைப்பு வேலூர் எம்.பிக்கு நடத்திய வாழ்த்தரங்கம்‏
[+] Read More
18-MARCH-2009
‌ மீலாதுப் பெருவிழா காய‌ல் ம‌வ்ல‌வி டி.எஸ்.ஏ. செய்ய‌து அபுதாஹிர் ஆலிம் பங்கேற்பு
[+] Read More
12-MARCH-2009
துபாயில் ஈமான் நடத்திய ரத்ததான முகாம்....
[+] Read More

மானுட வசந்தம்
[+] Read More
 
துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் மீலாத் பேச்சுப் போட்டி

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு மிலாத் பேச்சுப் போட்டியினை 19.02.2010 வெள்ளிக்கிழ‌மை மாலை 4.30 ம‌ணிக்கு இந்திய‌ க‌ன்சுலேட் அர‌ங்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து என‌ ஈமான் அமைப்பின் பொதுச்செயலாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி தெரிவித்துள்ளார்.

துபாய் ஈமான் அமைப்பு வ‌ருடந்தோறும் ந‌ட‌த்தி வ‌ரும் இப்பேச்சுப் போட்டியில் இவ்வாண்டு 'அகில‌த்தின் அருட்கொடை ந‌பி ( ஸ‌ல் ) அவ‌ர்க‌ள் எனும் த‌லைப்பில் ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து. இதில் அனைத்து ச‌மூக‌த்தின‌ரும் ப‌ங்குபெற‌லாம்.

இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு எமிரேட்ஸ் நிறுவ‌ன‌ம் வ‌ழ‌ங்கும் துபாய் - சென்னை  - துபாய் விமான‌ப் ப‌ய‌ண‌ச்சீட்டும், லேண்ட்மார்க் ஹோட்ட‌ல் வ‌ழ‌ங்கும் எட்டு கிராம் நாண‌ய‌ம், ஜெனார்ட் வாட்ச‌ஸ் வ‌ழ‌ங்கும் கைக்க‌டிகார‌ங்க‌ள், ETA ASCON  வ‌ழ‌ங்கும் திர்ஹ‌ம் 1000 க்கான‌ ப‌ரிசுக் கூப்ப‌ன், இந்தியா சில்க் ஹ‌வுஸ் வ‌ழ‌ங்கும் திர்ஹ‌ம் 500 க்கான‌ ப‌ரிசுக் கூப்ப‌ன், அல் ஹ‌ஸீனா ஜுவ‌ல்ல‌ர்ஸ் வ‌ழ‌ங்கும் திர்ஹ‌ம் 200 க்கான‌ ப‌ரிசுக் கூப்ப‌ன் ஆகிய‌வை வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

போட்டியாள‌ர்க‌ள் 18 வ‌ய‌து நிர‌ம்பிய‌வ‌ராக‌ இருத்த‌ல் வேண்டும். த‌மிழில் ம‌ட்டுமே பேச‌ அனும‌திக்கப்ப‌டுவ‌ர். பேசுவ‌த‌ற்கான‌ நேர‌ம் 5 நிமிட‌ங்க‌ள். போட்டி ந‌டைபெறும் அர‌ங்கினுள் போட்டியாள‌ர்க‌ள் 15 நிமிட‌ம் முன்ன‌தாக‌ வ‌ருகை புரிந்து த‌ங்க‌ளை வ‌ருகையை உறுதி செய்த‌ல் வேண்டும்.

போட்டிக்கு விண்ண‌ப்பிக்க‌ இறுதி நாள் : 10 பிப்ர‌வ‌ரி 2010

மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு : 050 51 96 433 / 050 467 43 99 / 050 58 53 888 / 050 475 3052
E-mail : imantimes@gmail.com
 Notes